/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு நாவாஸ்கனி எம்.பி., கடிதம்
/
திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு நாவாஸ்கனி எம்.பி., கடிதம்
திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு நாவாஸ்கனி எம்.பி., கடிதம்
திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக முதல்வருக்கு நாவாஸ்கனி எம்.பி., கடிதம்
ADDED : ஜன 26, 2025 08:14 AM
ராமநாதபுரம்: மதுரை திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பாக விரைவில் சுமூக முடிவு ஏற்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என முதல்வர் ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் எம்.பி.,யும், வக்பு வாரிய தலைவருமான நவாஸ்கனி கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது: மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்திருக்கும் சிக்கந்தர் பாதுஷா தர்கா தமிழ்நாடு வக்பு வாரியத்திற்குட்பட்டது.
வக்பு வாரியத்தலைவர் என்ற முறையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். திருப்பரங்குன்றம் மலை, மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் நல்லிணகத்துடனும் வாழ்கின்றனர்.
வெளியூர்களில் இருந்து அரசியல் செய்யும் நோக்கோடு செல்லும் சில அரசியல் கட்சியினரால் தான் அங்குதேவையற்ற பதற்றமும், அமைதியின்மையும் பிரச்னையும் ஏற்படுகிறது.
அங்கு அமைந்துள்ள கோயில் நிர்வாகத்தினர், ஹிந்து அறநிலையத் துறையினர், தர்கா நிர்வாகத்தினர், தமிழ்நாடு வக்பு வாரியம் அரசு வருவாய்த்துறை உள்ளடக்கிய குழுவினை ஏற்படுத்தி கலெக்டர் தலைமையில் இக்குழுவோடு உரிய ஆலோசனை செய்து விரிவான ஆய்வு மேற்கொண்டு இந்த பிரச்னைக்கு சுமூகமான முடிவு, நிரந்தர தீர்வு எட்ட வழி வகுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரையை உள்ளடக்கிய தென் தமிழகத்தில் ஹிந்து, முஸ்லிம் அனைத்து தரப்பட்ட மக்களும் உறவு முறைகளோடு வாழ்கின்றனர்.
இந்த அமைதியை கெடுக்க நினைப்போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் சுமூகமான முடிவை விரைந்து எடுத்திட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.--------

