/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அமிர்த வித்யாலயாவில் நவராத்திரி உற்ஸவம்
/
அமிர்த வித்யாலயாவில் நவராத்திரி உற்ஸவம்
ADDED : அக் 07, 2024 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆர்.எஸ்.மடை அமிர்த வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் நவராத்திரி உற்ஸவம் நடந்து வருகிறது.
பள்ளி கலையரங்கில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு அவற்றின் முன்பு பள்ளி மாணவர்களின் பக்தி பாடல்கள், பஜனை உள்ளிட்டவைகள் நடந்தது.
அனைவருக்கும் பல வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பள்ளி மேலாளர் பிரம்மச்சாரிணி லட்சுமி தலைமை வகித்தார். முதல்வர் கோகிலா முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பாலவேல் முருகன் வரவேற்றார். நவராத்திரி விழாவின் சிறப்புகள் குறித்த ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.