/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்படை தினம் விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் வருகை
/
கடற்படை தினம் விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் வருகை
கடற்படை தினம் விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் வருகை
கடற்படை தினம் விழிப்புணர்வு வாகனம் ராமநாதபுரம் வருகை
ADDED : அக் 21, 2024 05:01 AM

ராமநாதபுரம்: சென்னையில் இருந்து கடற்படை வீரர்கள் விழிப்புணர்வு பயண வாகனம் ராமநாதபுரம் வந்தது.
இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தலைமையிடத்தில் இருந்து 15 தலைமை அலுவலர்கள் மற்றும் வீரர்கள் கொண்ட குழு சென்னை முதல் கன்னியாகுமரி வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்.17 ல் துவங்கி 6 நாட்களில் 1800 கி.மீ., பயணித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சென்றடைய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கடற்படை விழிப்புணர்வு பயணத்தை கடற்படை பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் பாரம்பரியம், முக்கியத்துவம் வாய்ந்த சிறப்புகளை நினைவு கூர்ந்திடும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நேற்று ராமநாதபுரம் வந்த கடற்படை வாகனத்தை கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் வரவேற்று துவக்கி வைத்தார்.
இப்பயணத்தில் கடற்கரைப்பகுதி பள்ளி, கல்லுாரி மாணவர்களிடம் இந்த வாகனப்பயணத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர் என ராமேஸ்வரம் கடற்படை பொறுப்பு அதிகாரி கமாண்டர் நரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

