/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அவசியம்: மதுரை- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை .... : மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
/
அவசியம்: மதுரை- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை .... : மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவசியம்: மதுரை- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை .... : மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவசியம்: மதுரை- தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை .... : மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்
ADDED : ஜூலை 05, 2025 11:05 PM

ராமநாதபுரம்: -மதுரையிலிருந்து தனுஷ்கோடி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்ய மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் இருந்து ராமேஸ்வரத்தை இணைக்கும் நோக்கில் கொச்சி முதல் தனுஷ்கோடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இருவழிச் சாலையாக இருந்ததை போக்குவரத்து நெரிசல் காரணமாக மத்திய அரசு விரிவுபடுத்தும் நோக்கத்துடன் மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி ரூ.937 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதன்படி மதுரையில் இருந்து பரமக்குடி அடுத் உரப்புளி வரை 76 கி.மீ., நான்கு வழிச்சாலை பணி 2014 ல் துவக்கப்பட்டது. இந்த சாலை பணிகள் நிறைவு பெற்ற பின் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் இருந்து -தனுஷ்கோடி வரையிலான சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்படாமல் 9 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
இதன் காரணமாக வட மாநிலங்களில் இருந்து வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி வரை பயணித்து அதன் பிறகு இரு வழிச்சாலையில் பயணிக்கும் போது அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான நான்கு வழிச்சாலையின் அகலம் 60 மீ., அளவிற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். ஆனால் 45 மீ., குறைந்த அகலத்தில் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. நெடுஞ்சாலை ஆணையம் இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் இருந்தது.
இந்நிலையில் பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரையிலான 46 கி.மீ., நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1853 கோடி நிதி ஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 87 ல் ராமநாதபுரம் முதல் தனுஷ்கோடி வரையிலான சாலை இருவழிச்சாலையாக இருப்பதால் இதனையும் ஒரே நேரத்தில் நான்கு வழிச்சசாலையாக மாற்றம் செய்ய வேண்டும்.
நான்கு வழிச்சசாலையில் பயணிக்கும் வாகனங்கள் திடீரென இரு வழிச்சாலைக்கு மாறும் போது விபத்துக்களை சந்தித்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. முழுமையாக தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் விபத்துக்களை குறைக்க முடியும். போக்குவரத்து நெருக்கடியிலிருந்தும் தப்பிக்க முடியும்.
------------