/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்
/
சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்
ADDED : ஏப் 08, 2025 05:38 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வாரச்சந்தை புலவரப்பா வளைவு ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து வாரச்சந்தை வழியாக பரமக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட கிராமப் பகுதிகள் பயனடைகின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டில் வாகன போக்குவரத்து தினமும் அதிகளவில் உள்ளன.
இந்நிலையில், வாரச் சந்தை புலவரப்பா வளைவு ரோட்டில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. அப்பகுதியில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் விதமாக வளைவு ரோடு பகுதியில் சென்டர் மீடியன் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
அப்பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கும் பட்சத்தில் தனித்தனி பாதைகளில் வாகன ஓட்டிகள் இடப்புறமாக சென்று வரும் நிலை ஏற்படும். இதனால் எதிரெதிரே வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்படுவது தடுக்கப்படும். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.