/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேப்ப மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் கிராம மக்கள் கால்நடைகளுக்கு தீவனமாகிறது

ADDED : அக் 01, 2024 04:50 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே வேடக்கரிசல் குளம், மணிவலை, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களின் வயல்வெளிகளில் ஏராளமான வேப்ப மரங்கள் வளர்க்கப்படுகின்றன.
கிராமங்களில் மிகுதியான அளவு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகள் வீடுகள் தோறும் வளர்க்கப்படுகின்றன. விவசாயிகளின் பிரதான தொழிலாக இவை விளங்குகின்றன.
இந்நிலையில் நெல் வயல்களின் வரப்பு ஓரங்களில் வரிசையாக வேப்ப மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. பெரிய அளவில் வளர்ந்து மரமாகியுள்ளது. விவசாயிகள் கூறியதாவது:
எங்களின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு திகழ்கிறது. செம்மறியாடு, வெள்ளாடுகளின் இரைக்காக வேப்ப மர இலைகள் தீவனமாக பயன்படுகிறது. வேப்ப மரத்தில் சீசன் காலங்களில் கிடைக்கக்கூடிய வேப்ப முத்து சேகரிக்கப்பட்டு தனி வருவாய் ஈட்டப்படுகிறது.
வேப்ப முத்து மூலமாக வேப்ப எண்ணெய், புண்ணாக்கு தயார் செய்யப்படுகிறது. இயற்கை உரத்திற்கு வேப்பம் புண்ணாக்கு பயன்படுகிறது. நெல் சாகுபடி செய்யக்கூடிய விளை நிலங்களின் வரப்புகளில் மிகுதியான அளவு வேப்ப மரங்கள் வளர்க்கப்படுவதால் வெயிலின் தாக்கம் குறைந்து பசுமையான ஊராகத் திகழ்கிறது.
எங்கள் கிராமத்தை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். அதே வேளையில் பல ஆண்டுகளாக சாலை வசதி இன்றி ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் புதிய தார் ரோடு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.