/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் அலட்சியம் *தடையை மீறி நீரை வெளியேற்றி மீன்பிடிப்பு
/
அதிகாரிகள் அலட்சியம் *தடையை மீறி நீரை வெளியேற்றி மீன்பிடிப்பு
அதிகாரிகள் அலட்சியம் *தடையை மீறி நீரை வெளியேற்றி மீன்பிடிப்பு
அதிகாரிகள் அலட்சியம் *தடையை மீறி நீரை வெளியேற்றி மீன்பிடிப்பு
ADDED : செப் 05, 2024 05:17 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரகோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கம் செய்ய வருகின்றன.
கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக அக்.,ல் வந்து மார்ச் வரை தங்கி அதன்பின் இடம் பெயர்கின்றன. பறவைகளின் இரைக்காக இங்குள்ள கண்மாய்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வனத்துறைச் சார்பில் சரணாலயங்களில் மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் போதிய கண்காணிப்பு இல்லாததால் சிலர் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து மீன்களை பிடிக்கின்றனர்.
அவ்வாறு பிடிக்கும் போது சிறிய வகை மீன்கள் கரையில் இறந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பறவைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படும். வரும் அக்., நவ.,ல் பறவைகள் வரும் சீசன் என்பதால் சரணாலயப்பகுதியில் தடையை மீறி மீன்பிடிப்பவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம் வனச்சரகர் திவ்யலட்சுமி கூறுகையில், சக்கரகோட்டை கண்மாயில் மோட்டர் வைத்த தண்ணீர் எடுத்தவர்களை ஏற்கனவே விரட்டியுள்ளோம். மீன்பிடிப்பது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.