ADDED : ஜன 24, 2025 04:19 AM
அ நிறம் | அளவு
சாயல்குடி,: சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர்களுள் ஒருவரான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா நேற்று சாயல்குடியில் கொண்டாடப்பட்டது.
சாயல்குடியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் நேதாஜி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
முக்குலத்தோர் சங்கத் தலைவர் ராமர், செயலாளர் பச்சமால், பொருளாளர் சுப்ரமணி, பா.ஜ., முன்னாள் மாநில விவசாய அணி செயலாளர் முருகவேல், முன்னாள் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் முனியசாமி, புதுக்குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் உணவு வழங்கப்பட்டது.
