ADDED : ஜன 24, 2026 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 129வது பிறந்த நாள் விழா ரெகுநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே கொண்டாடப்பட்டது.
நேதாஜி வீர போர் படை நிறுவனத் தலைவர் பாலகுரு தலைமை வகித்தார். நேதாஜியின் உருவப்படத்திற்கு மலர் துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல், நாகா மெட்ரிகுலேஷன் பள்ளியின் நிறுவனர் வெண்மதி நாதன், பா.ஜ., பிரசார பிரிவு மாவட்டத் தலைவர் முனியசாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிநாதன், ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

