/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவிற்கு புதிய நிர்வாகிகள்
/
ஏர்வாடி தர்காவிற்கு புதிய நிர்வாகிகள்
ADDED : ஏப் 16, 2025 08:42 AM
கீழக்கரை : ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலமான ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமான வெளி மாநில, மாவட்ட யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். இங்கு நடக்கும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா சிறப்பு வாய்ந்தது.
ராமநாதபுரம் சார்பு நீதிமன்ற சமரச திட்ட விதிகளின்படி நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு மூன்று ஆண்டிற்கு ஒரு முறை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளால் தர்கா நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது.
தர்கா நிர்வாகம் அடுத்த மாதம் நிறைவுக்கு வரும் நிலையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தேர்தல் நடத்தும் அலுவலராக வழக்கறிஞர் அற்புதராஜ் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவராக அகமது இப்ராகிம், செயலாளராக சித்திக், உதவி தலைவராக முகம்மது சுல்தான் ஆகியோரும் மற்றும் 18 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.