/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் புதிய பேட்டரி கார் ரூ.10 கட்டணம்! இலவசமாக வழங்கி பேட்டரி கார் பயனின்றி உள்ளது

ADDED : மே 13, 2024 12:16 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக சுற்றுலாத்துறை சார்பில் இலவச பயணத்திற்கு வழங்கப்பட்ட பேட்டரி கார் பராமரிப்பின்றி பயனற்றதாக உள்ள நிலையில் தற்போது நபருக்கு ரூ.10 கட்டணத்தில் புதிய பேட்டரி கார் இயக்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரயில், சென்னைக்கு இரு ரயில்கள், பல்வேறு மாநிலங்களுக்கு வாராந்திர ரயில்கள், ஹீப்ளிக்கு விரைவு ரயில், கன்னியாகுமரிக்கு அதி விரைவு ரயில், கோவை, திருச்சி என பல்வேறு மார்க்கங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் பயணத்திற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், நடக்க முடியாவர்கள் ரயிலில் தங்களது கோச்களில் ஏற பேட்டரி கார் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வழங்கப்பட்டது.
சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்ட இந்த பேட்டரி கார் முறையான பராமரிப்பு இல்லாமல் காட்சி பொருளாக ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு இலவசமாக இயக்கப்பட்டது. தற்போது ரயில்வே நிர்வாகம் புதியதாக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ஒரு பேட்டரி காரை இயக்கி வருகிறது. இதில் நபர் ஒருவருக்கு 10 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
பயணிகளுக்கு இலவமாக இயக்கப்பட்ட சுற்றுலாத்துறைபேட்டரி காரை சரியாக பராமரிப்பு செய்யாமல் ஒரங்கட்டப்பட்டு காட்சி பொருளாக்கிவிட்டு புதிய பேட்டரி காரை கட்டணத்தில் இயக்குவது ரயில்வே நிர்வாகத்தின் நியாயமான செயலா, பயணிகள் வசதிக்காக ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பேட்டரி காரை இலவசமாக இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.----------