UPDATED : ஜூலை 06, 2026 04:42 PM
ADDED : ஜூலை 06, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி:பரமக்குடி பஸ் ஸ்டாண்டிலிருந்து பிரண்டைகுளம் மற்றும் மேலாய்க்குடி கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜிவ் பஸ் வசதியை துவக்கி வைத்தார். தினமும் காலை, மாலை நேரங்களில் இந்த பஸ்கள் இயக்கப்படும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர்.
அதன்பிறகு அம்மா உணவகத்தில் அமைச்சர் ராஜிவ் ஆய்வு செய்தார். அப்போது ஈக்கள் மொய்த்த நிலையில் உணவுகள் இருந்ததால் சுகாதாரமான முறையில் வைத்திருக்க கூறினார். பரமக்குடி நகராட்சி கமிஷனர் தாமரை, காரைக்குடி மண்டலம் பரமக்குடி, கமுதி கிளை அலுவலர்கள், முன்னாள் எம்.எல்.ஏ., முருகேசன் பங்கேற்றனர்.
---
