/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தலைமை மருத்துவமனையில் ஆமை வேகத்தில் புதியக் கட்டடப்பணிகள்
/
தலைமை மருத்துவமனையில் ஆமை வேகத்தில் புதியக் கட்டடப்பணிகள்
தலைமை மருத்துவமனையில் ஆமை வேகத்தில் புதியக் கட்டடப்பணிகள்
தலைமை மருத்துவமனையில் ஆமை வேகத்தில் புதியக் கட்டடப்பணிகள்
ADDED : நவ 05, 2024 04:59 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி காட்டு பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டடம் 5 தளங்களுடன் கட்டும் பணி ஆமைவேகத்தில் நடக்கிறது. பணிகளை விரைந்து முடித்து உயர்தர சிகிச்சைக்கு வழி வகுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரமக்குடியில் அரசு மருத்துவமனை 1977ல் துவக்கப்பட்டது. 47 ஆண்டுகளைக் கடந்த இங்கு தற்போது 1000 புறநோயாளிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டு 2023 பிப்.28ல் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து பழைய கட்டடம் இடிக்கும் பணிகள் நீண்ட மாதங்கள் நடந்தன.
இங்கு 5 தளங்களுடன் ரூ.57.50 கோடியில் கட்டுமானப் பணிகள் நடக்கும் சூழலில் தற்போது 2வது ஆண்டை தொடும் நிலையில் முதல் தளம் மட்டுமே பணி நிறைவடைந்துஉள்ளது. இங்கு எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., சி.டி., ஸ்கேன், மோனோ கிராம், எக்கோ கருவிகள், அவசர சிகிச்சை, தீக்காய பிரிவு, ஆப்பரேஷன் தியேட்டர்கள், நவீன மருந்தகம் என அமைக்கப்பட உள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில் குறைந்த அளவிலான இடத்தில் அரசு மருத்துவமனை செயல்படுவதால் எந்தவித வசதிகளும் முறையாக கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படும் நிலை அதிகரித்துள்ளது.
இதனால் தற்போதைய நிலையில் கட்டுமானப் பணிகளை விரைவுப்படுத்துவதுடன் மருத்துவமனையில் உள்ள குறைபாடுகளை போக்கி டாக்டர்கள், செவிலியர்களை போதிய அளவில் நியமித்து மக்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.