/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் புதிய வாறுகால் புனித தீர்த்தம் அழியும் அபாயம்
/
ராமேஸ்வரத்தில் புதிய வாறுகால் புனித தீர்த்தம் அழியும் அபாயம்
ராமேஸ்வரத்தில் புதிய வாறுகால் புனித தீர்த்தம் அழியும் அபாயம்
ராமேஸ்வரத்தில் புதிய வாறுகால் புனித தீர்த்தம் அழியும் அபாயம்
ADDED : செப் 27, 2025 11:36 PM

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு இல்லாத பகுதி யில் நகராட்சி அமைத்த புதிய வாறுகாலால் புனித தீர்த்தம் அழியும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சி யில் ரூ.20 லட்சத்தில் பத்ர காளியம்மன் கோயில் முதல் தரவை வரை 160 மீ.,க்கு மழைநீர் செல்ல வாறுகால் அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. ஆனால் இந்த இடத்தில் மழைநீர் வாறுகால் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. வாறுகால் துவக்கம் முதல் முடிவு வரை 10 அடி ஆழத்திற்கு பள்ளம் உள்ளதால் இந்த 160 மீ., இடையில் எந்த இடத்திலும் மழை நீர் தேங்காது. மேலும் இப் பகுதியில் மழைநீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பும் ஏற்பட்டதில்லை.
இதனை கருத்தில் கொள்ளாமல் அவசரகதியில் வாறுகால் அமைத்து வருவதால் நகராட்சிக்கு ரூ.20 லட்சம் வீணாகும். மேலும் இந்த வாறுகால் செல்லும் வழியில் உள்ள வீடுகள், விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சட்ட விரோதமாக வாறுகாலில் இணைக்க வாய்ப்புள்ளது. இதனால் மழை நீருடன், கழிவு நீரும் கலந்து தரவையில் தேங்கி அங்குள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் கலக்கும்.
இதனால் புனித தீர்த்தம் மாசடைந்து அழிந்துபோகும் அபாயம் உள்ளது. எனவே இந்த வாறுகால் கட்டுமானத்தை நிறுத்தி, மாற்று வழித்தடத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.