ADDED : ஜூலை 01, 2025 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் அருகே ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. முதுகுளத்துார்- - பரமக்குடி ரோடு பிள்ளையார் கோயில் அருகே இரும்பு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
மக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதால் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் காரணமாக சேதமடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது.