/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரம்
/
புதிய குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரம்
புதிய குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரம்
புதிய குண்டு மிளகாய் வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரம்
ADDED : பிப் 18, 2024 07:08 AM
ஆர்.எஸ்.மங்கலம : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், முதுகுளத்துார், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும், சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி தாலுகாவிலும் அதிகளவில் குண்டு மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு இதற்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மிளகாய் செடிகள் தற்போது மகசூல் சூழ்நிலையை அடைந்து புதிய வரவாக செடிகளில் இருந்து பறிக்கப்பட்ட மிளகாயை வெயிலில் உலர்த்தி வத்தலாக்கி விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தில் நேற்று நடந்த வாரச்சந்தைக்கு 30 குவிண்டால் (குவிண்டால் 100 கிலோ) குண்டு மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்தது. முதல் தரம் பெரிய குண்டு வத்தல் குவிண்டால் ரூ.25 ஆயிரத்திற்கும், இரண்டாம் தரம் சிறிய குண்டு வத்தல் குவிண்டால் ரூ.21 ஆயிரத்திற்கும் விற்பனையானது. சில்லரை விலையில் குண்டு மிளகாய் வத்தல் கிலோ ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனையானது.