/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய அறிவுசார் மையம் திறப்பு கதவு சேதம்: இப்பவே இப்படியா...
/
புதிய அறிவுசார் மையம் திறப்பு கதவு சேதம்: இப்பவே இப்படியா...
புதிய அறிவுசார் மையம் திறப்பு கதவு சேதம்: இப்பவே இப்படியா...
புதிய அறிவுசார் மையம் திறப்பு கதவு சேதம்: இப்பவே இப்படியா...
ADDED : ஜன 06, 2024 05:33 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரோட்டில் நர்சிங் பள்ளி அருகே புதிய அறிவுசார் மையம் திறப்பு விழா நடந்தது. இங்கு கழிப்பறை கதவு சேதமடைந்துள்ளதால் இப்பவே இப்படியா என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022ல் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வழியாக திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா, நகராட்சி தலைவர் கார்மேகம், கமிஷனர் அஜிதா பர்வீன் முன்னிலை வகித்தனர்.
அறிவுசார் மையம் காலை 10:00 முதல் மாலை 6:00மணி வரை செயல்படுகிறது. 2000 புத்தகங்கள், குழந்தைகள், பொதுமக்கள் வாசிப்பு கூடங்கள், இன்டர்நெட் வசதியுடன் கம்ப்யூட்டர் மையம் ஆகியவை உள்ளன. இம்மையத்தில் கழிப்பறை கதவு அதன் தாழ்ப்பாள் தற்போதே சேதமடைந்துள்ளது. இது குறித்து புகார் கூறிய போது கலெக்டர் பார்வையிட்டு உடனடியாக சரிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கல்லுாரி, பள்ளி மாணவர்கள் அறிவுசார் மையத்தை பார்வையிட்டு புத்தங்களை பார்வையிட்டனர்.கழிப்பறை கதவு சேதமடைந்துள்ளதால் திறக்கும் போதேஇப்படியா.. என மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.