/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புது மதுக்கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
/
புது மதுக்கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
புது மதுக்கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
புது மதுக்கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால் மூடல்
ADDED : ஜன 26, 2025 07:01 AM

தொண்டி : தொண்டி அருகே புதிய மதுக்கடை திறக்கபட்ட ஒரு மணி நேரத்தில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டதால் மூடப்பட்டுள்ளது.
தொண்டி அருகே பெருமானேந்தல் கிராமத்தில் நேற்று புதிதாக மதுக்கடை திறக்கபட்டது. தகவலறிந்த தொண்டி, பெருமானேந்தல் கிராம மக்கள் கடையை மூடக்கோரி விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவாடானை தாசில்தார் அமர்நாத், தொண்டி போலீசார் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மதுக்கடை மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ளது. கடை அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் கோயில்கள் உள்ளன. எனவே மதுக்கடையை மூட வேண்டும். இப்பகுதியில் வேறு எந்த இடத்திலும் மதுக்கடை திறக்க கூடாது என மக்கள் வலியுறுத்தினர்.
கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டது. கடையில் உள்ள மதுபாட்டில்களை உடனடியாக ஏற்றி செல்ல வேண்டும் என்று கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடையை மூடியபின் மதுபாட்டில்கள் ஏற்றி செல்லபடும் என்று தாசில்தார் கூறினார். அதன்பின் திறக்கபட்ட ஒரு மணி நேரத்திற்குள் மதுக்கடை மூடப்பட்டது.