ADDED : ஜன 18, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே சேதமடைந்துள்ள மின்கம்பம் பதிலாக புதிய மின்கம்பம் மாற்றப்பட உள்ளது.
முதுகுளத்துார் துணைமின் நிலையத்திலிருந்து சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. தாலுகா அலுவலகம் அருகே 25 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சேதமடைந்து விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் காரணமாக சேதமடைந்துள்ள மின்கம்பத்திற்கு பதிலாக புதிய மின்கம்பம் நேற்று கொண்டுவரப்பட்டு விரைவில் மாற்றப்பட உள்ளதாக என மின்வாரிய பணியாளர்கள் கூறினர்.