/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தங்கச்சிமடத்தில் புதிய ரயில்வே ஸ்டேஷன்: வணிகர்கள் கோரிக்கை
/
தங்கச்சிமடத்தில் புதிய ரயில்வே ஸ்டேஷன்: வணிகர்கள் கோரிக்கை
தங்கச்சிமடத்தில் புதிய ரயில்வே ஸ்டேஷன்: வணிகர்கள் கோரிக்கை
தங்கச்சிமடத்தில் புதிய ரயில்வே ஸ்டேஷன்: வணிகர்கள் கோரிக்கை
ADDED : டிச 16, 2024 07:32 AM
ராமேஸ்வரம் : -ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மக்கள் நலன் கருதி புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தங்கச்சிமடத்தில் வணிகர்கள் சங்கம் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில், தங்கச்சிமடம் ஊராட்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏற்கனவே இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் அகற்றியதால் சரக்கு, பயணிகள் போக்குவரத்து இன்றி பாதிக்கின்றனர்.
தற்போது புதிய பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளதால், இங்கு புதிய ரயில்வே ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.
இங்கு பழுதாகி கிடக்கும் ஏ.டி.எம்., மையங்களை சரி செய்ய வேண்டும்.
சாலை இருபுறமும் உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் உபயோகமின்றி சேதமடைந்து கிடக்கும் மழைநீர் வாறுகாலை அகற்ற வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின் கூட்டத்தில் 2025 ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர்.
கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் ஷியாமுதீன், கட்டித்துரை, ஆரோக்கியதாஸ், ஹரிராமநாதன் பங்கேற்றனர்.

