/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனுஷ்கோடியில் புதிய மணல் தீடை
/
தனுஷ்கோடியில் புதிய மணல் தீடை
ADDED : டிச 25, 2025 05:39 AM
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகில் உருவான புதிய மணல் தீடையில் ஏராளமான கடல் புறாக்கள் உலா வருகின்றன.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
இங்குள்ள தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவில் சுற்றுலா பயணிகள் நின்றபடி செல்பி எடுத்துக் கொண்டு அழகிய கடற்கரையை கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கடலில் ஏற்பட்ட நீரோட்டம் மாறுபாட்டால் அரிச்சல் முனை கட லோரத்தில் புதிதாக மணல் தீடை உருவாகி உள்ளது. இத்தீடையை சுற்றி ஏராளமான கடல் புறாக்கள் சங்கமித்து கடல் நீரில் நீந்தும் சிறிய மீன்களை உட்கொண்டு உலா வருகிறது. இந்த தீடைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலையில், ரவுண்டானாவில் நின்றபடி பார்த்து ரசிக்கின்றனர்.

