/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாரச்சந்தையில் ஓய்வு அறையுடன் ரூ.13.50கோடியில் புதிய கடைகள்
/
வாரச்சந்தையில் ஓய்வு அறையுடன் ரூ.13.50கோடியில் புதிய கடைகள்
வாரச்சந்தையில் ஓய்வு அறையுடன் ரூ.13.50கோடியில் புதிய கடைகள்
வாரச்சந்தையில் ஓய்வு அறையுடன் ரூ.13.50கோடியில் புதிய கடைகள்
ADDED : ஜன 29, 2024 05:14 AM
பரமக்குடி: பரமக்குடி வாரச்சந்தையில் ரூ. 13.50 கோடியில் இரண்டு தளங்களில், வியாபாரிகளுக்கான ஓய்வு அறையுடன் கூடிய புதிய கடைகள் அமைக்கப்பட உள்ளது.
பரமக்குடி நகராட்சி வாரச் சந்தையில் அடிப்படை வசதிகள் குறித்து 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து சுட்டி காட்டி வருகிறது.
மழை நேரங்களில் சேறும், சகதியுமாக இருந்ததுடன், கழிப்பறை வசதிகள் உட்பட கூரை இன்றி வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் 2 தளங்களில் 44 கான்கிரீட் கடைகள், 260 காய்கறி, 120 கருவாடு கடைகள், கால்நடைகளுக்கான தனிச்சந்தை மற்றும் வியாபாரிகளுக்கு இரண்டு ஓய்வு அறைகள், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியுடன் மேற்கொள்ளப்பட உள்ளது.
ரூ. 13.50 கோடியில் கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர் சேது கருணாநிதி தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் (பொறு) கண்ணன் வரவேற்றார்.
எம்.எல்.ஏ., பரமக்குடி முருகேசன், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.