தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/புதிய பாடநுால் பயிற்சி முகாம்

புதிய பாடநுால் பயிற்சி முகாம்

புதிய பாடநுால் பயிற்சி முகாம்


UPDATED : அக் 13, 2026 05:59 PM

ADDED : அக் 13, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 05:59 PM ADDED : அக் 13, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி அருகே மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். அப்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 3ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான புதிய பாடத்திட்டம் எந்த வகையில் உள்ளது. புதிய தொழில் நுட்பங்களை எவ்வாறு வழங்குகிறது. மாணவர்களின் யோசிக்கும் திறனை எந்தெந்த வகையில் புதிய பரிமாணத்திற்குள் கற்றுத் தர வேண்டும்.

அவர்களின் எதிர்கால கனவுகள் வெற்றி பெற புதிய பாடத்திட்டம் எந்த வகையில் உதவுகிறது. மாணவர்களின் தன்னம்பிக்கை, சுய சிந்தனையாற்றல், தாமாக கற்கும் ஆற்றல் உருவாக்குதல் குறித்து விளக்கினார். இதில் 11 வட்டாரங்களைச் சேர்ந்த 91 ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ராமர், செந்தில்குமார், பிருந்தா தேவி விளக்கினர். சண்முகவேல், செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர். பாக்கியம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us