தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ எஸ்.பி.பட்டினத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள்

எஸ்.பி.பட்டினத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள்

எஸ்.பி.பட்டினத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர்கள்


UPDATED : மே 08, 2026 07:04 PM

ADDED : மே 08, 2026 07:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 08, 2026 07:04 PM ADDED : மே 08, 2026 07:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தொண்டி: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கடற்கரை மற்றும் மத்திய பகுதி ஆகிய இரு இடங்களில் மக்களின் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கபட்டன.

இதற்கான துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் கணேசன் துவக்கி வைத்தார். மின்வாரிய செயற்பொறியாளர் (பொ) சித்திவிநாயகமூர்த்தி, உதவி பொறியாளர் விஜயன் பங்கேற்றனர். 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் மூலம் எஸ்.பி.பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின் அழுத்த பிரச்னை இன்றி தடையற்ற மின்சாரம் வழங்கபடும். மின்விநியோகம் சீராக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us