/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு 2 மாதத்தில் சேதம்
/
புதிதாக அமைக்கப்பட்ட ரோடு 2 மாதத்தில் சேதம்
ADDED : மே 27, 2025 10:13 PM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுாரில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட ரோடு இரண்டே மாதத்தில் சேதமடைந்துள்ளது.
முதுகுளத்துார் அருகே மேலக்கொடுமலுாரில் இருந்து கிருஷ்ணாபுரம் வழியாக கோனேரியேந்தல் கிராமத்திற்கு ரோடு சேதமடைந்துள்ள நிலையில் இருப்பதால் மக்கள் சிரமப்பட்டனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்துள்ளனர். இதையடுத்து 3 கி.மீ.,க்கு ரூ.1 கோடியே 96 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரோடு அமைக்கும் பணி நடந்தது.
பணிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு முடிவுற்ற நிலையில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு இருப்பதாக கிராம மக்கள் புகார் அளித்தனர். கோனேரியேந்தல் சேர்ந்த பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
கிராமத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. அவ்வப்போது மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தது. இதை அப்பகுதி மக்கள் சீரமைத்தனர். அதுமட்டும் இல்லாமல் புதிதாக அமைக்கப்பட்ட ரோடு கைகளால் பெயர்த்தெடுக்கும் அளவில் தரமற்றதாக உள்ளது.
இதனால் ரோடு அமைக்கப்பட்டும் கிராமத்திற்கு விரைவில் சேதமடையும் நிலை உள்ளது. எனவே ரோடு பணியை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.