/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வவ்வால்களின் புகலிடமான புயல் காப்பகம்
/
வவ்வால்களின் புகலிடமான புயல் காப்பகம்
ADDED : அக் 08, 2018 02:39 AM

ராமேஸ்வரம்:புயல் காலத்தில் மீனவர்களை பாதுகாக்க கடலோரத்தில் கட்டப்பட்ட புயல் காப்பகம் பராமரிப்பின்றி இடியும் நிலையில் வவ்வால்களின் புகலிடமாக மாறியுள்ளது.1978 ல் ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளியால் மீனவர்களின் குடிசைகள் சேதமடைந்ததால், பள்ளி, கோயில்களில் மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
அதன்பின் 1982ல் பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் என மாவட்டத்தில் 30 புயல் காப்பகங்கள் கட்டப்பட்டது. இதில் 200 மீனவர்கள் தங்கும் வசதியுடன் சமையல் அறை, கழிப்பறை, மின்வசதிகள் இருந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க தவறியதால், புயல் காப்பகத்தில் கான்கிரீட் மேற்கூரை, ஜன்னல், கதவுகள், சிமென்ட் சிலாப் உடைந்து, வவ்வால்களின் புகலிடமாகி மாறி விட்டது. துவங்கவுள்ள பருவமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புயல் காப்பகங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புயல் காப்பகத்தை பராமரிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.