/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீரன் வலசை சுடுகாடுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
/
வீரன் வலசை சுடுகாடுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
வீரன் வலசை சுடுகாடுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
வீரன் வலசை சுடுகாடுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு
ADDED : ஜூலை 05, 2010 01:02 AM
கீழக்கரை : திருப்புல்லாணி அருகே வீரன்வலசை கிராமத்தில் 150 க்கும் அதிகமான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.இந்த மக்கள் தனியாருக்கு சொந்தமான நிலத்தை சுடுகாடாக பயன்படுத்தி வந்தனர்.
இதனால் இடையூறு ஏற்பட்டு வந்ததால் இறந்தவரை புதைப்பதில் மக்கள் சிரமமடைந்து வந்தனர்.பலமுறை அதிகாரிகளிடத்தில் சுடுகாடுக்காக இடம் கேட்டும் ஒதுக்கப்படவில்லை.இதை தொடர்ந்து டி.ஒய்.எப்.ஐ., சார்பில் பாடை கட்டி ஊர்வலம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் ராமநாதபுரம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் மணிமாறன் எஸ்.ஐ., முன்னிலையில் சமாதான கூட்டத்தில் முடி வானதால் பாடை ஊர்வலம் கைவிடப்பட்டது. ஊராட்சி தலைவர் ராஜூ,கிராம தலைவர் வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.