/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
/
நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழா
ADDED : அக் 12, 2024 04:27 AM

கமுதி: கமுதி அருகே முத்தாலங்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு விழா நடந்தது.
பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். தினமும் அய்யனாருக்கு பூஜை நடந்தது. கண்ணார்பட்டியில் இருந்து மண்ணால் செய்த கருப்பணசுவாமி, பைரவர், அம்மன், குதிரைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட தவளும் பிள்ளைகள் ஊர்வலமாக முத்தாலங்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர்.
விநாயகர் கோயிலில் தானியங்கள் வைத்து பூஜை, கண் திறப்பு செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் உலா வந்து நிறைகுளத்து அய்யனார் கோயிலில் பூஜை செய்தனர். பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஒயிலாட்டம்நடந்தது. முளைப்பாரிகளை ஊர்வலமாக சென்று ஊருணியில் கரைத்தனர்.