/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க கூடாது: கூட்டத்தில் தீர்மானம்
/
கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க கூடாது: கூட்டத்தில் தீர்மானம்
கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க கூடாது: கூட்டத்தில் தீர்மானம்
கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைக்க கூடாது: கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஆக 17, 2025 11:04 PM
ராமநாதபுரம் : கும்பரம் ஊராட்சியில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கு மேற்பட்ட குக்கிராம மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. -
மண்டபம் இடையே தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கும்பரம் கிராமத்தை ஒட்டியுள்ள பகுதியில் விமான நிலையம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அப்பகுதி மக்கள் ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனை கூட்டத்தில்கும்பரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன் வலசை, பூஜாரி வலசை, ஏ.டி., நகர், கோகுல்நகர், கல்கண்டு வலசை, கிருஷ்ணா நகர், கும்பரம் வடக்கு, கும்பரம் தெற்கு, படை வெட்டி வலசை, மணியக்கார வலசை கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஊர் முக்கியஸ்தர் சிவானந்தம் தலைமை வகித்தார். ஆறுமுகம், ராமு, பாலகிருஷ்ணன், தங்கச்சாமி, ராஜேஸ்வரி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் முத்துராமு, தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், கதிர்வேல் ஆரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது கும்பரம் பகுதியில் மூன்று லட்சம் தென்னை மரங்களும், 10 லட்சம் பனை மரங்களும் உள்ளன.
கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன. மண் வளம் நிறைந்த இப்பகுதியில் விமானநிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் வாழும் 5000 சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் இந்த பகுதியில் விமான நிலையம் அமைப்பதை கைவிட்டு மாற்று ஏற்பாடு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

