/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'சிசிடிவி' கேமரா இல்லை ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : ஆக 09, 2025 03:11 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமரா இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
ராமேஸ்வரம் கோயில், சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயிலில் வந்திறங்குகின்றனர். இங்கு மதுரை, திருச்சி, சென்னைக்கு தினசரி ரயிலும், கோவை, கன்னியாகுமரி, திருப்பதிக்கு வாரம் ஒருமுறை மற்றும் வாரம் 3 நாட்களும், கர்நாடகா, உ.பி., ராஜஸ்தான், குஜராத், ஆகிய மாநிலங்களில் இருந்து வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து செல்கின்றன.
இதனால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இச்சூழலில் ரயில்வே ஸ்டேஷனில் சமூக விரோத செயல்களை கண்காணித்து தடுக்க சி.சி.டி.வி., கேமரா இல்லாதது பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த ராமேஸ்வரம் ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.