வீடுகளில் கதவிலக்கம் இல்லை கணக்கெடுப்பு பணிக்கு சிக்கல்
வீடுகளில் கதவிலக்கம் இல்லை கணக்கெடுப்பு பணிக்கு சிக்கல்
ADDED : மே 13, 2026 03:35 AM
ராமநாதபுரம்: ஊராட்சிகளில் கதவிலக்க எண்: நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப் படவுள்ளது.
இந்த முறையில் பொதுமக்கள் தங்கள் விபரங்களை இணையதளம் மூலமாக பதிவு செய்ய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் வீடுகளின் பட்டியலும், இரண்டாம் கட்டத்தில் மக்கள் தொகை கணக் கெடுப்பும் இருக்கும்.
தமிழகத்தில் பொதுமக்கள் இணையதளத்தில் சுயவிபரங்கள் பதிவிடுவதும், வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது.
ஆனால் கிராம ஊராட்சிகளில் வீடுகளில் வரிவிதிப்பு எண், கதவிலக்கம் முறையாக வழங்கப்படவில்லை.
இதனால் வீடுகளை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக வீடுகளுக்கு அதிகாரிகள் சென்று கணக்கெடுக்கும் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீட்டு கதவிலக்கம் இல்லாததால் கணக்கெடுப்பில் சிக்கல் ஏற்படும்.
எனவே வீடுகளில் வரிவிதிப்பு எண் மற்றும் கதவிலக்க எண்களை உடனடியாக எழுதுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
