/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் எத்தனை முறை ரோடு அமைத்தாலும் தேங்கும் கழிவுநீர்
/
பரமக்குடியில் எத்தனை முறை ரோடு அமைத்தாலும் தேங்கும் கழிவுநீர்
பரமக்குடியில் எத்தனை முறை ரோடு அமைத்தாலும் தேங்கும் கழிவுநீர்
பரமக்குடியில் எத்தனை முறை ரோடு அமைத்தாலும் தேங்கும் கழிவுநீர்
ADDED : ஆக 30, 2025 11:34 PM

பரமக்குடி: பரமக்குடியில் எத்தனை முறை ரோடு அமைத் தாலும் மழை நேரங்களில் தண்ணீர் தேங்குவது மட்டும் சீராகவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. ஒவ்வொரு வார்டிலும் 4 அடி சந்துகள் முதல் 20 அடிக்கும் மேல் ரோடு இருக்கிறது.
இதன்படி பகுதிக்கேற்ப பேவர் கல் தளம், சிமென்ட் தளங்கள் மற்றும் தார் ரோடு என அமைக்கப்படுகிறது.
தொடர்ந்து நகராட்சி பகுதியில் புதிய விரிவு படுத்தப்பட்ட இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பரமக்குடியில் அமைத்த ரோட்டையே மீண்டும் அமைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் கூறி வருகின்றனர். ஒரு பகுதியில் ரோடு அமைத்து சில ஆண்டுகள் ஆன பிறகு மீண்டும் புதிய ரோடு அமைக்க முடியும்.
இச்சூழலில் நல்ல ரோட்டிலேயே மீண்டும் ரோடு அமைக்கும் நிலையில் மழை நீர் வழிந்தோடும் வகையில் எந்த முன்னெச்சரிக்கையும் செய்வதாக தெரியவில்லை. இதனால் தொடர் மழை காலங்களில் ரோட்டில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி உள்ளது. நேற்று மதியம் 3:00 மணி முதல் 2 மணி நேரத்திற்கும் மேலாக விட்டுவிட்டு மழை பெய்தது. அப்போது மழை நீருடன் கழிவு நீர் கலந்து வழக்கமான பகுதிகளில் தேங்கியது.
மேலும் பேவர் பிளாக் கல்தளம், தார் ரோடுகள் அமைத்த இடங்களில் தண்ணீர் தேங்கும் நிலை அதிகமாக உள்ளது. ஆகவே நகராட்சி அதிகாரிகள் ரோடு அமைக்கும் போது கண்காணிப்பதுடன், மழை நீர் வழிந்தோடாத பகுதிகளில் அமைக்கப்பட்ட புதிய ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

