/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை
/
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை
டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை
ADDED : செப் 27, 2025 03:54 AM
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு யாரும் விண்ணப்பிக்காததால் வேளாண் அலுவலர்களே அப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் தாலுகா வாரியாக ஆடி, கார்த்திகை, கோடை பட்டங்களில் சாகுடி செய்யப்படும் பயிர்கள் டிஜிட்டல் கிராப் சர்வே மூலம் கணக்கெடுக்கப்படுகிறது.
இந்த சர்வே பதிவுகள் ஏதேனும் இயற்கை சீற்றத்தால் பயிர் சேதமடைந்தால் இழப்பீடு வழங்க பயன்படும் என கூறப்பட்டது. கடந்த ஆண்டு ஆடிப்பட்ட சாகுபடி வி.ஏ. ஓ.,க்கள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டது.
அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்வே எடுக்கவில்லை. வேளாண் மாணவர்கள் மூலம் கணக்கெடுக்கப்பட்டது. சர்வே பணியால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டதால் அத் திட்டமும் கைவிடப்பட்டது. பயிர் சாகுபடியை கணக்கிடும் டிஜிட்டல் கிராப் சர்வேக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. திருவாடானை தாலுகாவில் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன.
சாகுபடி நிலத்தில் இருந்து அதன் விபரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும். இப் பணிக்கு தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம். ஒரு சர்வே எண்ணுக்கு ரூ.15 என கணக்கிட்டு தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் வேளாண்மை அலு வலகத்தை அனுகலாம் என சில நாட்களுக்கு முன்பு அலுவலர்கள் அறிவித்தனர்.
ஆனால் யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் வேளாண்மை அலுவலக டிப்போ மேலாளரை தவிர மற்ற அலுவலர்கள் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.