/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்
/
வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்
வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்
வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்லாதீர்கள்
ADDED : டிச 23, 2024 04:41 AM

திருவாடானை: திருவாடானையில் வேளாண் அலுவலக கட்டடம் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.
திருவாடானை பாரதிநகரில் வேளாண்மை அலுவலகம் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகவும் சேதமடைந்தது.
பின் பக்கம் சுவர் இடிந்தது. சில நாட்களுக்கு முன்பு மேற்பகுதியில் இருந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்ததால் அலுவலர்கள் அச்சமடைந்தனர். அதனை தொடர்ந்து அலுவலகம் காலி செய்யபட்டது.
வேளாண் அலுவலக கட்டடம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளதால் கடடடத்திற்கு அருகிலோ உள்ளேயோ பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.