/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிரந்தர செயல் அலுவலர் இல்லை: தொண்டியில் பணிகள் முடக்கம்
/
நிரந்தர செயல் அலுவலர் இல்லை: தொண்டியில் பணிகள் முடக்கம்
நிரந்தர செயல் அலுவலர் இல்லை: தொண்டியில் பணிகள் முடக்கம்
நிரந்தர செயல் அலுவலர் இல்லை: தொண்டியில் பணிகள் முடக்கம்
ADDED : ஜன 14, 2025 08:05 PM
தொண்டி:
தொண்டி பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் அத்தியாவசியப் பணிகள் முடங்கியுள்ளது.
தொண்டி பேரூராட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பேரூராட்சியில் ஆறு மாதத்திற்கும் மேலாக நிரந்தரமான செயல் அலுவலர் நியமிக்கவில்லை. அவ்வப்போது மற்ற பேரூராட்சியில் பணியாற்றுபவர்கள் கூடுதல் பொறுப்பேற்று பணி செய்கின்றனர். ஆறு மாதத்திற்குள் மூன்று பேர் பணியாற்றியுள்ளனர்.
தற்போது சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார். நிரந்தர செயல் அலுவலர் நியமிக்காததால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகள் முடங்கியுள்ளது. தொண்டி மக்கள் நலப் பணிக்குழுவினர் கூறியதாவது:
பேரூராட்சி மக்கள் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதற்காக அலுவலகத்திற்கு சென்றால் செயல் அலுவலர் இல்லை என்று ஊழியர்கள் கூறி விடுகின்றனர். தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. ஆங்காங்கே ைஹமாஸ் விளக்குகள் பல மாதங்களாக எரியாமல் உள்ளது. முக்கிய இடங்களில் குப்பை தேங்கியுள்ளது.
பிளான் அப்ரூவல் மற்றும் குடிநீர் சம்பந்தமான பிரச்னைகள், திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அனைத்து பணிகளும் பேரூராட்சி நிர்வாகம் மூலமாகதான் நடக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொண்டி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.