/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
*ஊராட்சிகளில் கட்டடங்களுக்கு அனுமதி பெறுவதில்லை வருவாய் இழப்பு செயலாளர்கள் கண்காணிப்பு இல்லாததால் அவல நிலை

ADDED : டிச 14, 2025 06:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராம ஊராட்சிகளில் கட்டட அனுமதி பெறாமல் வீடுகள் கட்டுவதை ஊராட்சி செயலாளர்கள் கண்காணிக்க தவறுவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கட்டடங்கள் அனுமதி பெறுவதை எளிதாக்க ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் கட்டடம் கட்டுவதற்கான பல்வேறு துறை சார்ந்த அனுமதியை எளிதாக பெற முடியும். ஆனால் கிராம ஊராட்சிகளில் கட்டட அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஊராட்சி செயலாளர்களும் மக்களிடம் கட்டட அனுமதி பெற்றபின் கட்டடம் கட்டுமாறு தெரிவிப்பதில்லை.
அதே போல் கட்டுமானப் பணிக்கு தனி மின் இணைப்பு வழங்காமல் ஏதாவது ஒரு பழைய வீட்டு வரி ரசீது மூலம் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஊராட்சி செயலாளர்கள், மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தால் அரசுக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
கட்டடம் அனுமதி பெறாமல் கட்டுவதால் ஒரு கிராம ஊராட்சிக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒரு மாவட்டத்திற்கு ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. கிராமங்களில் கட்டுமான பணியை ஊராட்சி செயலாளர்கள் தீவிரமாக கண்காணித்தால் இத்தகைய இழப்பை தடுக்கலாம். மாவட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
--