/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்
/
மாணவர்கள் இல்லை: அரசு இசைப்பள்ளி மூடல்
ADDED : அக் 19, 2024 03:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரண்மனை இடத்தில் அரசு இசைப்பள்ளி செயல்பட்டது. பரதம், குரலிசை, தேவாரப்பாடல்கள், மிருதங்கம், தவில், நாதஸ்வர ஆசிரியர்கள் பணிபுரிந்தனர்.
நடப்பாண்டில் மாணவர்கள் யாரும் சேராத நிலையில் தற்போது மூடப்பட்டுள்ளது. இங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள அரசு இசைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரத்தில் தலைமையாசிரியராக பணிபுரிந்த சரவண மாணிக்கத்திடம் தொடர்பு கொண்ட போது 'வாகனம் இயக்கி கொண்டிருப்பதாகவும், விரைவில் பேசுகிறேன்' என்றார். அதன் பின் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

