/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய்களுக்கான நீர்வரத்து இல்லை: விவசாயம் பாதிப்பு
/
கண்மாய்களுக்கான நீர்வரத்து இல்லை: விவசாயம் பாதிப்பு
கண்மாய்களுக்கான நீர்வரத்து இல்லை: விவசாயம் பாதிப்பு
கண்மாய்களுக்கான நீர்வரத்து இல்லை: விவசாயம் பாதிப்பு
ADDED : நவ 19, 2025 07:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் பாண்டியன் கூறியதாவது:
கண்மாய்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு பலன் தரும் மரங்களை நட்டு வளர்க்க அனுமதிக்க வேண்டும். வைகை நீரை மட்டும் நம்பியுள்ள ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் வரத்து இல்லாமல் ஒரு போகம் விவசாயம் செய்வதே சவாலாக உள்ளது. வைகை அணையில் நீர் தேக்கும் திறன் குறைந்துள்ளது. அணையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் ஓ.என்.ஜி.சி.,க்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் நீர்வரத்து தடைபடுகிறது. கண்மாய் தலைவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றார். மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜீவானந்தம், கதிரேசன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

