/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் செயல்படாத பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
/
பரமக்குடியில் செயல்படாத பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
பரமக்குடியில் செயல்படாத பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
பரமக்குடியில் செயல்படாத பஸ் ஸ்டாப்: பயணிகள் பாதிப்பு
ADDED : நவ 18, 2024 07:10 AM

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி ஐந்து முனை ரோடு பகுதியில் இளையான்குடி பஸ் ஸ்டாப் செயல்படாத நிலையில் பயணிகள் சிரமம் அடைகின்றனர்.
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஐந்து முனை ரோடு வழியாக இளையான்குடி, சிவகங்கை, திருச்சி மற்றும் நயினார்கோவில் உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இதன்படி ஐயப்பன் கோயில் முன்பு பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது.
இந்த பஸ் ஸ்டாப் அருகில் பெரிய வாய்க்காலில் கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் பயணிகள் நிற்க வழியின்றி உள்ளது. இந்நிலையில் ஐந்து முனை ரோடு முதுகுளத்துார் மேம்பாலம் கீழ் பகுதியில் பயணிகள் பஸ் வருகைக்காக நிற்கின்றனர். அப்போது அடுத்தடுத்து வரும் வாகனங்களினால் பயணிகள் ஆபத்தான சூழலில் இருக்கின்றனர்.
மேலும் பஸ் ஸ்டாப் செயல்படாத நிலையில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. ஆகவே பயணிகளின் நலன் கருதி பஸ் ஸ்டாப் பகுதியில் கழிவுநீர் வாய்க்காலை முறைப்படுத்துவதுடன், பயணிகள் நிற்க வசதியை செய்து தர வேண்டும்.