/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருங்குளம் பகுதியில் செயல்படாத சுங்கசாவடி
/
பெருங்குளம் பகுதியில் செயல்படாத சுங்கசாவடி
ADDED : ஜன 08, 2024 05:49 AM

ராமநாதபுரம், : -ராமநாதபுரம் அருகே பெருங்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடி பயன்பாடின்றி விழும் நிலையில் உள்ளது.
பெருங்குளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டது.
இதில் நெடுஞ்சாலையில் வசதிகள் செய்யாமல் பணம் வசூலிக்க கூடாது என வழக்கு தொடர்ந்ததால் சுங்கச் சாவடி பயன்பாடில்லாமல் போனது.
இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டம் அகற்றப்படாமலும், முறையாக பராமரிக்கப்படாமலும் உள்ளது. இதில் வாகனங்கள் மோதியதில் பல இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இரும்பு குழாய்களால் அமைக்கப்பட்ட கூரையும் சேதமடைந்துள்ளது.
இதனால் இப்பகுதியில்செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இடையூறாக உள்ள சேதமடைந்த சுங்க சாவடிகட்டடத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.