/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க கந்துாரி விழா அசைவ அன்னதானம்
/
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க கந்துாரி விழா அசைவ அன்னதானம்
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க கந்துாரி விழா அசைவ அன்னதானம்
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க கந்துாரி விழா அசைவ அன்னதானம்
ADDED : செப் 27, 2025 03:59 AM
சாயல்குடி: சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் பழமை வாய்ந்த அரக்காசு அம்மன் தர்கா மத நல்லிணக்க கந்துாரி விழாவில் அசைவ அன்னதானத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை கந்துாரி விழா நடக்கிறது. நேற்று காலை 9:00 மணி முதல் விழா துவங்கியது. நேர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்கிய 101 ஆட்டுக்கிடாக்கள், 101 சேவல்களை பலியிட்டு அவற்றை பெரிய அண்டாக்களில் சமைத்து நீண்ட பந்திகளில் பொதுமக் களுக்கு அசைவ அன்ன தானம் வழங்கினர். மாலை 4:00 மணி முதல் இரவு வரை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக அரக்காசு அம்மாவின் மக்பாராவில் சந்தனம் பூசப்பட்டு அவற்றின் மீது பச்சை வண்ண போர்வை போர்த்தப்பட்டு, மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டு, வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது.
கமுதி, முதுகுளத்துார், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஹிந்து, முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
விழாவில் பங்கேற்ற வர்களுக்கு நாட்டுச் சர்க்கரை, பொட்டுக் கடலை உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப் பட்டது.
ஏற்பாடுகளை பிள்ளையார்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.