ADDED : அக் 01, 2026 12:22 AM
கமுதி: கமுதி தாலுகா அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ளும் வகையில் அரசு அலுவலர்களுக்கு மீட்பு பணிகள் குறித்த செயல் விளக்க
ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர் சின்னத்துரை தலைமை வகித்தார். தாசில்தார் அய்யாதுரை, பி.டி.ஓ.,க்கள் மேகராஜ், சந்திரசேகர் முன்னிலை வகித்தனர். நிலைய பொறுப்பாளர் உத்தண்டசாமி உட்பட தீயணைப்பு வீரர்கள்
சார்பில் பெரும் வெள்ளத்தில்
சிக்கும் உயிரினங்கள்,
மக்களை மீட்பது, மழைக்காலங்களில் மக்கள்
தங்களை தற்காத்துக் கொள்ள எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், பொது மக்களுடன் இணைந்து அரசு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு குறித்து அரசு
அலுவலர்களுக்கு
விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் செயல் அலுவலர்கள் மாலதி, யசோதா, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தாலுகா பணியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை உட்பட 13 அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
