ADDED : பிப் 20, 2026 07:31 AM

அ நிறம் | அளவு
கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் கழுகு ஊருணி முனியப்பசாமி, சீலைகாரி அம்மன், காரைகூட்டம் அய்யனார், காளியம்மன் கோயில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடந்தது. போட்டியில் மதுரை,விருதுநகர், சிவகங்கை, துாத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு குத்து விளக்கு,ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
