ADDED : ஜூலை 24, 2026 12:18 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது.
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற பல மாவட்டங் களிலிருந்து வந்த காளைகள் வட்டத்தில் அவிழ்த்து விடப்பட்டன.
சீறிப்பாய்ந்த மாடுகளை வீரர்கள் அடக்க முயன்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் அடக்கிய வீரர்களுக்கும், வீரர் களிடமிருந்து பிடி படாமல் இருந்த காளை களின் உரிமையாளர் களுக்கும் விழாக் குழு வினர் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.
