ADDED : பிப் 09, 2026 04:35 AM
சிக்கல்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, கடலாடி கிழக்கு ஒன்றியம் பா.ஜ., சார்பில் கொத்தங்குளம் கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
40 அடி நீளமுள்ள வட கயிற்றின் ஒரு பகுதியில் காளையின் கழுத்தில் கட்டப்பட்டு மறுபுறம் உரலால் கட்டப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்டது. 9 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.20 நிமிடத்தில் பிடித்த வீரர்களுக்கு பரிசும், பிடிபடாத காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப் பட்டது.
பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். கடலாடி கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, முதுகுளத்துார் சட்டசபை பொறுப்பாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

