/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திட்டமிட்டபடி ஸ்டிரைக் ஓய்வூதியர்கள் அறிவிப்பு
/
திட்டமிட்டபடி ஸ்டிரைக் ஓய்வூதியர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 07, 2024 02:16 AM
ராமநாதபுரம்:'அகவிலைப்படி நிலுவை வழங்குவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன., 9 திட்டமிட்டபடி வேலை நிறுத்தப்போராட்டம் நடக்கும்,' என, ராமநாதபுரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் தெரிவித்தனர்.
அமைப்பின் செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது: தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவையை விரைந்து வழங்க வேண்டும்.
போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும்- செலவுக்குமான வித்தியாசத்தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.
சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமரச பேச்சுவார்தையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில் சமரசம் ஏற்படவில்லை.
இன்று(ஜன.,7) பேச்சுவார்தைக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.