/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
/
ரெகுநாதபுரத்தில் என்.எஸ்.எஸ்., முகாம்
ADDED : அக் 03, 2024 04:22 AM
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் என்.எஸ்.எஸ்., சார்பில் ஏழு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது. துவக்க விழாவிற்கு தலைமை ஆசிரியர் யுனைசி தலைமை வகித்தார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா முன்னிலை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் கனகராணி, என்.எஸ்.எஸ்., தொடர்பு அலுவலர் ராமகிருஷ்ணன், ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவர் ஜெகத்ரட்சகன், கவுன்சிலர் நாகநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், பிரதமரின் துாய்மையே சேவை குறித்தும், ஊட்டச்சத்து மற்றும் கண்காட்சி நடந்தது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரகுமத்துல்லா செய்திருந்தார்.