ADDED : அக் 07, 2024 11:00 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு முகாம் நடந்தது. தாளாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி, தலைமையாசிரியர் காஜா நிஜாமுதீன் குரைசி முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் நுாருல்அமீன் வரவேற்றார்.
வெங்கலக்குறிச்சிகண்மாய், ஊருணி, பள்ளி வளாகம் சுத்தம் செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது. மருத்துவ முகாம், தீயணைப்பு பற்றி விழிப்புணர்வு, கால்நடை மருத்துவ முகாம் நடத்தினர்.
போதைப்பொருள் தடுப்பு, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊராட்சி செயலர் பொன்னுமணி உட்பட கிராமமக்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.
