ADDED : பிப் 08, 2024 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி, : பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.
ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி தலைமை வகித்தார். ஆயிர வைசிய சபை தலைவர் போஸ், இணை தலைவர் பாலுச்சாமி, பள்ளி செயலாளர் லெனின் குமார் முன்னிலை வகித்தனர். பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி ஓய்வு தலைமை ஆசிரியர் பி.கே.மணி எழுதிய 'என் நினைவில் நிறைந்த ஆசிரியர்கள்' என்ற நுாலை ஓய்வு பெற்ற கல்வித்துறை இணை இயக்குனர் எழுத்தாளர் பக்தவச்சலன் வெளியிட்டு பேசினார்.

