நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: மாவட்ட கலை இலக்கியக் கழகம் சார்பில், தலைவர் சுப்பையா எழுதிய பாரதமே விழித்தெழு என்ற நுால் வெளியீட்டு விழா ராமநாதபுரத்தில் நடந்தது.
கம்பன் கழகத்தலைவர் சுந்தரராஜன் தலைமை வகித்தார். நுாலின் முதல்பிரதியை தமிழ் சங்க துணைத்தலைவர் விவேகானந்தன், 2ம் பிரதியை மன்ற தலைவர் சுந்தரபாண்டியன் பெற்றுகொண்டனர். நுாலாசிரியர் சுப்பையா ஏற்புரை நிகழ்த்தினார். தமிழ்ச்சங்கப் பொருளாளர் மங்களசுந்தர மூர்த்தி, கவிஞர் மாணிக்கவாசகம் பங்கேற்றனர்.